கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்ட நபர்

கடுவெல – கொரதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினராக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொரதொட்ட பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முகத்தை முழுவதுமாக மறைக்கு ஹெல்மெட் அணிந்திருந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களால் அவரது தலையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(Visited 20 times, 1 visits today)