களுபோவில ஹத்போதிய பிரதேசத்தில் 1,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் 1000 போதைப்பொருள் கடத்திய நபர் களுபோவில ஹத்போதிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (01) கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுபோவில பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொஹுவல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)