அமெரிக்காவில் பறவை காய்ச்சலுடன் சற்று வேறுபட்ட வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்!
அமெரிக்காவில் முதல் முறையாக பறவைக் காய்ச்சலுடன் சற்று வேறுப்பட்ட தொற்று பாதிப்பு ஏற்பட்ட நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வாஷிங்டன் மாநில சுகாதார அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர்.
தொற்றுக்குள்ளான குறித்த நபர் நவம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து வைத்திய கண்காணிப்பில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நபருக்கு அதிக காய்ச்சல், குழப்பம் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதாகவும் மருத்துவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளான நபரின் இரத்த பரிசோதனையில் பொதுவாக பறவைகள் மத்தியில் பரவும் H5N1 வைரஸ் தொற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு H5N5 தொற்று பரவி வருவதாகவும், இது தொற்று நோய் வளர்ச்சியாக கருதப்படுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்துவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த தொற்றானது பொதுமக்கள் பயப்படும் அளவிற்கு ஆபத்தானது இல்லை என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




