இலங்கையில் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்து செலுத்தப்பட்டப்பின் பரிதாபமாக உயிரிழந்த நபர்!

இலங்கை – கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பி செலுத்தப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து இது சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17வது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு Cefuroxime என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அந்த நபர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் 31 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆண்டிபயாடிக் மருந்தை செலுத்தியதால் மரணம் நிகழ்ந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
(Visited 15 times, 1 visits today)