புளோரிடாவில் இருந்து ஹைட்டி வந்த பயணிகள் விமானம் மீது துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவிலிருந்து வந்த பயணிகள் விமானம் போர்ட்-ஓ-பிரின்ஸில் தரையிறங்க முயன்றபோது துப்பாக்கிச் சூடு நடந்ததை தொடர்ந்து பல விமான நிறுவனங்கள் ஹைட்டிக்கான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன.
புளோரிடாவில் உள்ள ஃபோர்ட் லாடர்டேலில் இருந்து ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானம் 951 அண்டை நாடான டொமினிகன் குடியரசிற்கு திருப்பி விடப்பட்டது, அங்கு அது சாண்டியாகோ விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
ஒரு விமானப் பணிப்பெண் லேசான காயம் அடைந்தார், பயணிகள் யாரும் காயமடையவில்லை என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று வாரங்களில் ஹைதி தலைநகர் மீது விமானம் சுடப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ப்ளூ ஆகிய இரண்டு அமெரிக்க விமான நிறுவனங்களும் ஹைட்டிக்கான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன.
சமீபத்திய மாதங்களில் ஹைட்டியில் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அக்டோபரில், கும்பல் உறுப்பினர்கள் ஐநா ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதனால் சில விமான நிறுவனங்கள் கரீபியன் நாட்டிற்கான விமானங்களை தற்காலிகமாக ரத்து செய்தன.