இலங்கையின் ஒரு பகுதியில் சடுதியாக குறைந்த குழந்தைகளின் பிறப்பு விகிதம்
கம்பஹா மாவட்டத்தில் பிறக்கும் குழந்தைகளில் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி நிலவுவதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு தொடக்கம் இந்த வருடம் வரையில் சுகாதாரத் துறையின் தரவுகளின் பிரகாரம் இந்த குறைவு காணப்படுவதாக தெரிவிககப்படுகின்றது.
மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் இந்திக்க வன்னிநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் குழந்தைகளின் பிறப்புகளைப் பார்த்து, 29,560 குழந்தைகள் 2017 ஆம் ஆண்டு பிறந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு 29,224 குழந்தைகள், 2019 ஆம் ஆண்டு 28,553 குழந்தைகள், 2020 ஆம் ஆண்டு 27,497 குழந்தைகள், 2021 ஆம் ஆண்டு 24,999 குழந்தைகள், 2022 ஆம் ஆண்டு 23,512 குழந்தைகள் மற்றும் 2023 ஆம் ஆண்டு 23,512 குழந்தைகளும் பிறந்துள்ளது.
இந்த நிலையில் இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்திற்குள் 17,897 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.