“பாலஸ்தீன அரசு நிறுவப்படாது” – திட்டவட்டமாக கூறும் நெதன்யாகு!

இந்த மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையில் பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கும்போது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “பாலஸ்தீன அரசு நிறுவப்படாது” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தனது வலதுசாரி அரசாங்கத்தின் மாலே அடுமிம் குடியேற்ற விரிவாக்கத்தைக் கொண்டாடும் ஒரு விழாவில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“பாலஸ்தீன அரசு இருக்காது என்று நாங்கள் சொன்னோம் – உண்மையில் பாலஸ்தீன அரசு இருக்காது! இந்த இடம் எங்களுடையது. எங்கள் பாரம்பரியம், எங்கள் நிலம் மற்றும் எங்கள் பாதுகாப்பை நாங்கள் கவனித்துக்கொள்வோம்” என்று அவர் சூளுரைத்துள்ளார்.
பிரான்ஸ், கனடா மற்றும் இங்கிலாந்து தலைவர்கள் செப்டம்பரில் அடுத்த ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அறிவித்தனர். அந்த நேரத்தில், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் இந்த முடிவைக் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.