வட அமெரிக்கா

அமெரிக்காவில் விவாகரத்து கிடைத்ததால் பார்ட்டி வைத்து கொண்டாடிய பாகிஸ்தானிய பெண்..!

விவாகரத்து கிடைத்ததால் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் ஒருவர் பார்ட்டி வைத்து கொண்டாடினார். அவரது கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு அண்மையில் விவாகரத்து கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அவர் முடிவுசெய்தார். தனக்கு விவாகரத்துகிடைத்ததை தனது நண்பர்கள்,தோழிகளுடன் அவர் ஹோட்டலில் மிகப்பெரிய அளவில் பார்ட்டி வைத்துக் கொண்டாடியுள்ளார்.

விவாகரத்து கிடைத்ததற்கு வாழ்த்துகள் என்ற பின்னணிப் பலகையுடன் அவர் கொண்டாட் டத்தில் ஈடுபட்டார். மேடையில் ஏறி நின்று அவர் பாடலுக்கு நடனமாடியும், பாடல்களைப் பாடியும் கொண்டாடினார். ஊதா நிறலெஹங்கா உடையணிந்து அவர்தோழிகளுடன் ஆடிப்பாடினார். அவரது கொண்டாட்ட வீடியோசமூக வலை தளங்களில் வைரலாகிஉள்ளது. அவர் யாரென்ற விவரம்தெரியவில்லை.

மேலும் எதற்காக அவர் விவாகரத்து பெற்றார் என்ற காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவரது வீடியோவைப் பார்த்த பலர் அவருக்கு,வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளனர்.

அதே நேரத்தில் சிலர், விவா கரத்து கிடைத்தது சந்தோஷமான விஷயம்தான். ஆனால் அதே நேரத்தில் விவாகரத்தை கொண்டாடினால், திருமணம் செய்வதைக் கண்டு மக்கள் அஞ்சும் நிலை ஏற்படலாம் என்றும்கூறியுள்ளனர்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!