இலங்கை

கொழும்பில் பணியாற்றிய தாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிய தாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

பண்டாரவளை மகுலெல்ல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான சதுனிகா சமரவீர என்ற தாதியே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

விடுமுறைக்காக பண்டாரவளையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றிருந்த அவர், அங்கு உல்லாசப் பயணமாகச் செல்லத் தயாரான நிலையில், திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அவர் முன்னதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரதுமரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை எனவும், உடல் உறுப்புகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!