காஸாவில் போலியோ உள்ளிட்ட பல நோய் பாதிப்புகள் – கடும் நெருக்கடியில் மக்கள்
காஸா பகுதியில் போலியோ உள்ளிட்ட பல நோய் பாதிப்புகள் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலஸ்தீன சுகாதாரத் துறை இதனை தெரிவித்துள்ளது.
பாடசாலைகள் மற்றும் முகாம்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தூய்மையான குடிநீர் தட்டுப்பாடு, கழிவுநீர் தேக்கம், வெப்பநிலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நோய்த் தொற்று அதிகரித்து வருவதாகக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மருந்துப் பொருள்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்க முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றால் மிகப்பெரிய அழிவு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
(Visited 7 times, 1 visits today)