அடுத்த வாரம் பல அரசு ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானம்
அரச சேவையில் உள்ள பல தொழில் வல்லுநர்கள் எதிர்வரும் 9ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் அன்றைய தினம் சுகயீன விடுமுறை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட தொழில் நடவடிக்கை தற்போது 66 நாட்களாக நீடித்துள்ளது.
அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான இரண்டு மாத சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் அண்மையில் அறிவித்துள்ளார்.
இந்த கோரிக்கைகளை உதய சேனவிரத்ன குழுவிடம் முன்வைத்து 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதாக உறுதியளிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.