பிரான்ஸில் தோல்வியை தழுவிய பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்!

பிரான்ஸின் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு ( Sébastien Lecornu) மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியில் முடிந்துள்ளது.
பிரதமரையும் அவரது அரசாங்கத்தையும் வீழ்த்த, நாடாளுமன்றத்தில் உள்ள 577 எம்.பி.க்களில் 289 பேர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஆனால் 271 வாக்குகள் கிடைக்கப்பெற்று தீர்மானம் தோல்வியை தழுவியது.
இதேவேளை மரைன் லு பென்னின் ( Marine Le Pen) தேசிய பேரணியால் கொண்டுவரப்பட்ட மற்றொரு தீர்மானம் நிலுவையில் உள்ளது.
பிரான்ஸில் பிரதமருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்!
பிரான்ஸின் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு ( Sébastien Lecornu) இன்று இரண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்புகளை எதிர்கொள்கிறார்.
தீவிர வலதுசாரி தேசிய பேரணி கட்சி மற்றும் தீவிர இடதுசாரி கட்சியான லா பிரான்ஸ் இன்சூமைஸாலும் ( La France Insoumise) ஆகிய கட்சிகள் இவ்விரு தீர்மானங்களையும் கொண்டுவந்துள்ளன.
வரவு செலவு திட்டம், ஓய்வூதிய சீர்த்திருத்தங்கள் தொடர்பான சர்ச்சை உள்ளிட்ட சில விடயங்கள் பிரான்ஸின் அரசியல் பரப்பில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மீண்டும் பதவியேற்றதை அடுத்து புதிய பிரெஞ்சு அமைச்சரவையை நியமித்துள்ள லெகோர்னு