மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க புதிய வழி
2014ஆம் ஆண்டு மாயமான மலேசிய விமானத்தை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதும், எதுவும் கைகொடுக்காத நிலையில் , தற்போது சர்வதேச விண்வெளி நிபுணர்கள் ஜீன்-லூக் மார்கண்ட் மற்றும் பைலட் பேட்ரிக் பிளெல்லி ஆகியோர் காணாமல் போன விமானம் பற்றிய தகவல்களை கண்டறிய முடியும் எனவும், அதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
இதுகுறித்து சீனா செய்தி நிறுவனம் ஒன்று பல்வேறு தகவல்களை பதிவிட்டுள்ள்ளது. விண்வெளி நிபுணர்களான ஜீன்-லூக் மார்கண்ட் மற்றும் பைலட் பேட்ரிக் பிளெல்லி ஆகியோர் காணாமல் போன விமானம் பற்றிய தரவுகளை சேகரிக்க முடியும் எனவும், இதற்கு மலேசிய அரசாங்கமும், ஆஸ்திரேலிய அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டுள்ளது.
லண்டனில் உள்ள ராயல் ஏரோநாட்டிக்கல் அமைப்பில் ஆராய்ச்சியாளர்கள் இந்த விவகாரம் குறித்து உரையாற்றியுள்ளனர். அதில், காணாமல் போன விமானம் குறித்த தகவல்களை 10 நாட்களில் கண்டறிய முடியும். நாங்கள் அதற்கான எழுத்துமுறை விளக்கங்களை முடித்துவிட்டோம்.
எங்களிடம் ஒரு ஆய்வறிக்கை உள்ளது. அதனை கொண்டு திட்டமிட்டு செயல்பட்டால் 10 நாட்களில் தகவல்கள் கிடைக்கும். இது குறைவான காலமாக இருக்கலாம். MH370இன் காணாமல் போனது பற்றி யாருக்கும் முழு விவரம் தெரியாது. ஆனால், இது ஒரு நம்பத்தகுந்த வழிமுறை நிச்சயம் கண்டறிய முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த விமான காணாமல் போனது பற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறுகையில், விமானம் வேண்டுமென்றே கடத்தப்பட்டு ஆழ்கடலில் வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை முன்மொழியப்பட்டுள்ளது. இந்த விமானம் அனுபவம் வாய்ந்த விமானியால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்,
காணாமல் போன சமயத்தில் விமானத்தின் டிரான்ஸ்பாண்டர் அணைக்கப்பட்டது. இந்தோனேசியா, இந்தியா மற்றும் மலேசியா வான்வெளி பரப்புகளுக்கு இடையே, ஆள் நடமாட்டம் இல்லாத நிலத்தில் விமானம் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென அதன் திசையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் விண்வெளி நிபுணர்களான ஜீன்-லூக் மார்கண்ட் மற்றும் பைலட் பேட்ரிக் பிளெல்லி ஆகியோர் குறிப்பிட்டனர்.