கொரோனாவை விட பேரழிவு தரும் புதிய வைரஸ் : அவசரமாக ஒன்றுக்கூடிய உலக தலைவர்கள்!
கோவிட் -19 ஐ விட மிகவும் பேரழிவு தரக்கூடிய ஒரு புதிய நோய் தாக்குபிடிக்க உலகம் தயாராக இல்லை என்று வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். புதிய தொற்று நோய்க்கு டிஸீஸ் X என பெயரிட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) முதலாளி Tedros Adhanom Ghebreyesus, ‘Disease X’ க்கு உலகம் தயாராக இல்லை என்று ஏற்கனவே கூறியிருக்கிறார்.
உலகத் தலைவர்கள் இந்த ஆண்டின் ஒரு பகுதியை அடுத்த தொற்றுநோய்க்கான தயாரிப்பு பற்றி விவாதித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை விட இது 20 மடங்கு அதிகமான இறப்புகளை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் தொற்றுக்கள் குறித்து இதன்போது கலந்துரையாடியுள்ளனர்.
இந்த ஆண்டு உலகப் பொருளாதார மன்றத்தில் டிஸீஸ் எக்ஸ் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
விலங்குகளின் வாழ்விடங்களில் மனித செயற்பாடு அதிகரிப்பதன் காரணமாக இவ்வறான தொற்று நோய்கள் ஏற்படுவதாக வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.