வௌவால்கள் மூலம் மனிதர்களை பாதிக்கும் புதிய வைரஸ் தாய்லாந்தில் கண்டுபிடிப்பு
தாய்லாந்தில் மனிதர்களை தாக்கும் புதிய வகை வௌவால் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹானில் வைரஸ்கள் குறித்த பரிசோதனைகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த புதிய வைரஸைக் கண்டுபிடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், உலகின் எந்தப் பகுதியிலும் இந்த வைரஸ் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய வைரஸுக்கு பெயர் எதுவும் முன்மொழியப்படவில்லை.
தாய்லாந்தில் உள்ள குகைகளில் வசிக்கும் வௌவால்களில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் விவசாயிகள் தங்கள் பயிர்களை வெற்றிகரமாக செய்ய வவ்வால் மலத்தை பயன்படுத்துவதால், விஞ்ஞானிகள் இந்த புதிய வைரஸ் வகையை உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 8 times, 1 visits today)