ஐரோப்பா

பிரான்ஸில் பரவியது புதிய வைரஸ்!

அமெரிக்காவில் 1955ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது பிரான்ஸில் பரவியுள்ளது.

காய்ச்சல், பசியின்மை, சுவாசக் கோளாறு, மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படும் குறித்த வைரஸ், இறப்பைக்கூட ஏற்படுத்தக் கூடியது.

அமெரிக்காவில் இருந்து இத்தாலி, ஸ்பெயின் வழியாக ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருவதாக ஐரோப்பிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தாம் 2022ம் ஆண்டில் இருந்து மிகவும் உண்ணிப்பாக அவதானித்து வருவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

காடுகளில் வாழும் மான்கள், ஆடுகளில் காணப்பட்ட வைரஸ் தொற்று. பண்ணைகளுக்கும் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் குறித்த பகுதிகளில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் இருந்து விலங்குகளை இறைச்சிக்காகவோ, ஏனைய தேவைகளுக்காகவோ ஏற்றுமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ் நுளம்புகள் மூலம் பரவும் எனவும், விலங்குகளை தாக்குமே தவிர மனிதர்களுக்கு இதனால் எந்தவிதமான ஆபத்துகளும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தேசிய உணவு பாதுகாப்பு நிறுவனம் இறைச்சிக்காக வரும் அனைத்து விலங்குகளை பரிசோதிக்க பரிந்துரைத்து இருக்கிறது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!