WhatsApp குரூப் வசதியில் வந்தது புதிய அப்டேட் – இனி உங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
WhatsApp குரூப்பில் ஒரு பயனர் சேரும் போது அதை அந்த குரூப் பற்றிய கூடுதல் தரவுகளை தரும் வகையில் நிறுவனம் இப்போது புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் அடுத்த முறை உங்களுக்கு தெரியாத நபர்கள் உங்களை குரூப்பில் சேர்த்தால் அல்லது உங்களுக்கு தெரியாத குரூப்பில் நீங்கள் சேர்க்கப்பட்டால் அது பற்றி உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
யார் உங்களை குரூப்பில் சேர்த்தது, அந்த குரூப் எப்போது தொடங்கப்பட்டது, யாரால் தொடங்கப்பட்டது என்று விவரங்கள் காண்பிக்கப்படும்.
இந்த அம்சம் தற்போது படிப்படியாக அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் அனைவருக்கும் கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது .
அடையாளம் தெரியாத நபர்கள் தவறான குரூப்பில் சேர்த்து மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் இந்த பாதுகாப்பு வசதி கொண்டுவரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.