மீன் விந்துவால் தயாரிக்கப்படும் புதிய வகை உணவு!
ஸ்பெயினில் உள்ள உணவகம் ஒன்றில் மீனின் விந்துவால் செய்யப்பட்ட உணவு ஒன்று பரிமாறப்படுகிறது. இது கிரீமியாக இருப்பதாக மக்கள் விரும்பி உண்கிறார்கள்.
டேபிஸ் முனோஸ் என்ற சமையல் கலைஞரே இந்த புதுவிதமான உணவை தயாரித்துள்ளார்.இவர் டைவர் எக்ஸ் ஓ எனும் உணவகத்தின் உரிமையாளர் ஆவார்.
மீனிலிருந்து சிறு பைகளில் விந்து எடுக்கப்படுகிறது. அவை வெள்ளை அல்லது வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த திரவத்தை உணவில் சேர்க்கிறார்கள், அல்லது உணவு சமைத்த பிறகு அதில் கலக்கப்படும். இந்த விந்துகள் பஃபர் பிஷ், மாங்க் பிஷ், காட் உள்ளிட்டவைகளில் இருந்து எடுக்கப்படுகிறது.
டேவிட் முனோஸ் அண்மையில் ஜப்பான் சென்றிருந்தார். அங்கு சமையல் கலைஞரான ஹிரோசாடோவுடன் மீன் விந்தணுக்களால் செய்யப்பட்ட உணவை ருசித்து பார்த்த பிறகு இந்த யோசனை வந்துள்ளது.மேலும், உணவு பட்டிலை பார்த்து யாரும் கேட்டால் மட்டுமே இது பரிமாறப்படும் என்று தெரிவித்துள்ளளனர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் விந்து உணவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் கொடுத்துள்ளார்கள். கடந்த 2022ம் ஆண்டு மேட்ரிட்டில் நடந்த விழாவில் உலகிலேயே சிறந்த சமையல் கலைஞர் என்பதற்கான விருதை பெற்றார் முனோஸ்.