இங்கிலாந்தில் முதன்முறையாக இனங்காணப்பட்டுள்ள mpox இன் புதிய திரிபு!
இங்கிலாந்தில் முதன்முறையாக mpox இன் புதிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி (UKHSA) லண்டனில் mpox வைரஸ் மாறுபாட்டான கிளேட் 1b இன் ஒரு வழக்கு இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
லண்டனில் உள்ள ராயல் ஃப்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியிடமிருந்து இந்த தொற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவரிடம் இருந்து வேறு யாருக்கேனும் பரவியதா என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பந்தப்பட்ட நபர் ஆப்பிரிக்காவில் விடுமுறையில் இருந்த நிலையில் ஒக்டோபர் 21 ஆம் திகதி லண்டன் திருப்பியுள்ளார்.
இந்த வழக்கு செவ்வாயன்று UKHSA க்கு உறுதி செய்யப்பட்டது.





