ஷர்துல் தாக்கூர் படைத்த புதிய சாதனை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 3-ஆம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய ஆணின் இன்னிங்ஸ்ன் போது ஷர்துல் தாக்கூர் நிதானமாக விளையாடி அரைசதத்தை கடந்தார்.
இந்நிலையில், இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர், தி ஓவலில் அதிக 50-க்கும் மேற்பட்ட டெஸ்ட் ஸ்கோரைப் பதிவு செய்ததற்காக டான் பிராட்மேன் மற்றும் ஆலன் பார்டரின் சாதனையை சமன் செய்தார். ஓவல் மைதானத்தில் ஷர்துல் தொடர்ந்து மூன்று 50-க்கும் அதிகமான ஸ்கோரை பதிவு செய்துள்ளார்.
ஷர்துல் தாக்கூர் கடைசியாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் 57(36), 60(72) மற்றும் 51(109) என மொத்தமாக 3 அரைசதங்கள் எடுத்துள்ளார். பிராட்மேன் இந்த சாதனையை 1930 களில் படைத்திருந்தார். தற்போது அவருடைய இந்த சாதனையை ஷர்துல் தாக்கூர் சமன் செய்துள்ளார்.
மேலும், மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 296 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கிய இரண்டாவது இன்னிங்சில் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 123 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.