இலங்கையில் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!

இலங்கையில் டிஜிட்டல் மின்சாரக் கட்டண பட்டியலை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் ஜூலை 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தெஹிவளை – ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் களனி ஆகிய பகுதிகளில் இந்த முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் மாதாந்த மின் கட்டணத்தின் சுருக்கம் வாடிக்கையாளரின் கையடைக்க தொலைபேசிக்கு அனுப்பப்படவுள்ளதுடன், மின்னஞ்சல் மூலமும் அனுப்பப்படவுள்ளது.
முன்னோடித் திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில், இலங்கை முழுவதும் இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)