இலங்கையில் அறிமுகமாகும் புதிய நடைமுறை!
இலங்கையில் நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 50 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் தனியாராலும், இலங்கை போக்குவரத்து சபையாலும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பஸ்களிலும் CCTV கெமராக்களை பொருத்துவது கட்டாயமாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
இலங்கை போக்குவரத்து சபையும், புகையிரத திணைக்களமும் இணைந்து 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவிருந்த E-Ticket முறையை, அடுத்த 6 மாதங்களுக்குள் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
(Visited 11 times, 1 visits today)