ஜெர்மனியில் அகதிகளுக்காக அமுலாகும் புதிய நடைமுறை!
ஜெர்மனியில் அகதிகளுக்கு வழங்கப்படுகின்ற நிதி உதவியானது பணமாக வழங்கப்பட்டது.
இனி வரும் நாட்களில் அவர்களுக்கு பண அட்டையாகவே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் அதிகரித்து வரும் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மனியுடைய பல மாநிலங்களானது அகதிகளுக்கு இதுவரை காலங்களும் வழங்கப்பட்டு வந்த பணத்தை பண அட்டை மூலம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயன் மற்றும் மெக்கலம்பேர்க் போன்ற மாநிலங்களும் இந்த விடயத்தில் தனி முடிவை எடுக்கப்பபோவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக பயன் மாநிலத்தில் இவ்வாறு அகதிகளுக்கு வழங்கப்படுகின்ற பண அட்டையின் மூலம் வழங்கப்படும் பணத்தில் மதுபானங்கள் வாங்க முடியாது என்ற நிலைப்பாட்டை மாநில அரசாங்கம் எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளையில் ஜெர்மடைய ஆளும் கூட்டு கட்சியான SPD, STP மற்றும் பசுமை கட்சியானது பயன் மாநில அரசாங்கத்துடைய இந்த முடிவானது மனித உரிமை மீறல் செயற்பாடு என்ற வகையில் கூறி இருக்கின்றது.