தென்கொரியாவில் எழுந்துள்ள புதிய சிக்கல் : தீர்க்க முடியாமல் போராடும் அரசு!
தென் கொரியா இதுவரை இல்லாத வகையில் கருவுறுதல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
அங்கு மக்கள் தொகை படுவேகமாக சரியும் நிலையில், அதைச் சரி செய்ய முடியாமல் தென்கொரிய அரசு போராடி வருகிறது.
இதே நிலை தொடர்ந்தால் தென்கொரியா என்ற நாடே இல்லாத சூழல் கூட உருவாகும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இப்போது தென்கொரிய 5.2 கோடி மக்கள்தொகையுடன் வலுவாக இருந்தாலும் இந்தாண்டு இறுதிக்குள் அது 1.7 கோடியாகக் குறையும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலைமையை சரிசெய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. இதன்படி அதிகம் குழந்தை பெறுவோருக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய இராணுவ சேவை திட்டத்தில் கூட சில மாற்றங்களை செய்துவருகிறது. அதாவது 30 வயதுக்குள் 3 குழந்தைகளுக்குத் தந்தையானால் கட்டாய ராணுவ பயிற்சியில் இருந்து கூட விலக்கு தருவது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.