ஐரோப்பா

பிரித்தானிய இளைஞர்கள் 04 ஆண்டுகள் ஐரோப்பாவில் தங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ள புதிய திட்டம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மொழியப்பட்ட திட்டங்களின்படி இளைஞர்கள் இங்கிலாந்துக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே எளிதாகச் செல்லவும், வேலை செய்யவும், படிக்கவும், பயிற்சி செய்யவும் அதிக நேரத்தை செலவிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தால் முன்வைக்கப்பட்ட திட்டத்தின் கீழ், 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே அதிக நடமாட்டத்தை அனுமதிக்க புதிய விதிகள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை என்றாலும் இதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தைகள் தீவிரமாக தொடங்கும் முன், அனைத்து நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய கவுன்சிலால் இந்த முன்மொழிவு மேலும் விவாதிக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் முன்மொழியப்பட்ட திட்டங்கள் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் ஐரோப்பாவில் தங்க அனுமதிக்கும், அதே விதிகள் பிரிட்டனுக்கு வரும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 20 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!