மக்களை கவர சஜித் அணி வகுத்துள்ள புது திட்டம்
அரசியல் கூட்டங்களுக்கு பதிலாக, வரும் காலங்களில் நாட்டில் தொடர் போராட்டங்களை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.
அதன் மூலம் மக்களை எளிதில் கவர முடியும் என்பது அவர்களின் கருத்து. நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டங்களை நடத்துவதற்கு ஆட்களை திரட்டுவதில் பெரும் சிக்கல் இருப்பதாக பெரும்பான்மையானோர் தெரிவித்துள்ளனர்.
கூட்டங்களை நடத்தி அசௌகரியங்களுக்கு உள்ளாவதை விட தொடர் போராட்டங்களை நடத்தி மக்கள் மத்தியில் செல்வது பலன் தரும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





