ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி இணைந்து புதிய நிறுவனம்
புதிய மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நம்பிக்கையில், ஜப்பானின் இரண்டு முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களான ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி இணைந்து புதிய நிறுவனத்தை நிறுவ திட்டமிட்டுள்ளன.
இந்த ஆண்டு ஜூலை மாதம் நிறுவப்படும் நிறுவனத்தின் பெயராக ALTNA என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய நிறுவனத்தின் பங்கு உரிமையில் 50/50 சதவீதம் ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி இடையே சமமாகப் பிரிக்கப்படும்.
மின்சார வாகன உற்பத்தியில் ஏற்படும் சவால்களை கூட்டாக எதிர்கொள்ளும் நம்பிக்கையில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.





