வட அமெரிக்கா

அமெரிக்கா-ரயில் நிலையத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்… ஒருவர் பலி; ஐவர் படுகாயம்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரம், பிராங்க்ஸில் ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பிராங்க்ஸில் மவுன்ட் ஈடன் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 4 ஆண்கள், 2 பெண்கள் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் 14 முதல் 71 வயதுக்கு உட்பட்டவர்களாவர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள செயின்ட் பர்னபாஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 34 வயது நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

New York: One killed, five injured in firing incident at subway station;  shooter on run - World News

இது தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் நடத்திய விசாரணையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தற்செயலாக நடக்கவில்லை என்பதும், ரயில் பயணத்தின்போது ஏற்பட்ட தகராறின் விளைவாக நடந்தது என்றும் தெரியவந்துள்ளது.

மவுன்ட் ஈடன் ரயில் நிலையத்தை ரயில் அடைந்ததும் மோதல் குழுவில் இருந்த ஒரு நபர் துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பிடிக்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் நியூயார்க்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 19 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!