அமெரிக்க துணை ஜனாதிபதியின் வீட்டில் அத்துமீறி நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் வீட்டில் இன்று காலை மர்ம நபர் ஒருவர் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ரகசிய சேவை அதிகாலை 12:15 மணிக்கு காவல்துறையை தொடர்பு கொண்டு இது தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து காவலில் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட் டிரைவில் (William Howard Taft Drive) அமைந்துள்ள வான்ஸின் வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
இது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





