இலங்கை செய்தி

இலங்கையில் வானில் இருந்து வீழ்ந்த மர்மப் பொருள்

இந்நாட்களில் பொலன்னறுவை உட்பட அண்மித்த பல கிராமங்களில் அடையாளம் தெரியாத மர்மப் பொருள் ஒன்று வானில் இருந்து விழுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி விழும் பொருட்கள் வெள்ளை நிறத்தில் சிலந்தி வலை போன்று இருப்பதாகவும், உடனே உடைந்து அழிந்துவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (10ஆம் திகதி) அதிகாலை பொலன்னறுவை, கதுர்வெல, பந்திவெவ, ஜயந்திபுர, ஹிகுராக்கொட, தம்பல உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த மர்மப் பொருள் அவதானிக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்னர், திம்புலாகல மற்றும் சிறிபுர பிரதேசங்களில் இருந்து மர்மப் பொருள் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இது குறித்து எங்களுக்கும் அறிக்கைகள் வந்துள்ளன. அந்த இடங்களுக்குச் சென்று பார்வையிட்டேன். அவை நூல் போன்ற பொருள் என்றாலும், தொட்டால் உடைந்துவிடும்.

பொலன்னறுவை பொது வைத்தியசாலை, ஜயந்திப்புர, பண்டிவெவ, கதுர்வெல போன்ற பகுதிகளிலிருந்து இந்த மர்மப் பொருள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவை என்னவென்று இப்போதைக்கு சரியாகச் சொல்ல முடியாது. இவற்றின் சில மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பவுள்ளோம்” என பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம். அழககோன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜயந்திபுர பிரதேசத்தில் உள்ள பல முன்பாடசாலைகளில் இந்த மர்மப் பொருள் விழுந்ததன் காரணமாக மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 15 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை