இலங்கை

இலங்கையில் சினிமா பாணியில் நடந்த சம்பவம் – பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மாணவா்கள்

இலங்கையில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை தொடா்பில் 3 மோசடி சம்பவங்கள் நேற்று இடம்பெற்றுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இந்த விடயத்தை தொிவித்துள்ளது.

பிபில, வெல்லஸ்ஸ தேசிய பாடசாலையில் பரீட்சாத்தி ஒருவா் தமது கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி காணித பாட வினாத்தாளினை வட்சப் ஊடாக ஆசிாியா் ஒருவருக்கு அனுப்பி விடைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், ஹேனேகம மஹா வித்தியாலயம் மற்றும் சீதுவ பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையங்களிலும் முறைகேடுகள் பதிவாகியுள்ளன.

இரண்டு பரீட்சாத்திகள் தமது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி கணித பாட வினாத்தாள்களை தனித்தனியாக ஆசிாியா்களுக்கு அனுப்பி விடைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்த போது பரீட்சை கண்காணிப்பாளரால் அந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடா்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளா் லசிக சமரகோன் தொிவித்துள்ளாா்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!