ஐரோப்பா

இங்கிலாந்தில் ஆசையாக ஆடர் செய்த காளான் சூப்பில் எட்டிப்பார்த்த எலி!

இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரை சேர்ந்தவர் சாம் ஹேவர்டு. இவருடைய காதலி எமிலி. இவர், சீன உணவு விடுதியில் சூப் ஒன்றை, ஆசையாக ஆர்டர் செய்து உள்ளார்.

அதனை வீட்டுக்கு கொண்டு வந்து காளான் நூடுல் சூப் என கூறி காதலருக்கு கொடுத்திருக்கிறார். காதலரும் ஆசையாக சூப்பை வாங்கி பருகியுள்ளார். 3ல் இரண்டு பங்கு சூப் உள்ளே போனதும் சூப்பில் ஏதோ ஒன்று நகர்ந்து சென்று உள்ளது.

இதனை கவனித்த சாம், முதலில் அது ஒரு பெரிய காளானாக இருக்கும் என நினைத்திருக்கிறார். ஆனால், முதலில் ஒரு பெரிய வால் மேலே வந்துள்ளது. அதனை பார்த்து அவர் மிரண்டு போய் விட்டார். அதன்பின்பே அது எலி என அவருக்கு தெரிய வந்தது. இதனை வீடியோவாக எடுத்துள்ளார். அதன்பின் காதலி ஆர்டர் செய்த உணவு விடுதிக்கு தொலைபேசி வழியே போன் செய்து பேசியுள்ளார்.

எமிலி பணம் கொடுத்து உணவு வாங்கியபோதும், அதற்கான பில் அவரிடம் இல்லாமல் போனது. அதனால், அது தங்களுடைய உணவு இல்லை என்றும், பணம் திருப்பி தர இயலாது என்றும் உணவகம் கைவிரித்து விட்டது. இதனால், அவர்களால் அதனை நிரூபிக்கவும் முடியவில்லை. எனினும், இதற்கு அவர்கள் மன்னிப்பு கோரினால் போதும் என்று சாம் கூறியுள்ளார்.

சமீபத்தில், அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் வசித்து வரும் ஒருவர், பிரபல ஆலிவ் கார்டன் என்ற இத்தாலிய உணவு விடுதியில் ஆர்டர் செய்த சூப் ஒன்றில் இறந்த எலியின் கால் ஒன்று கிடந்தது என குற்றச்சாட்டாக கூறினார். இதற்கு நஷ்ட ஈடாக ரூ.20.75 லட்சம் பணம் தரவேண்டும் என கோரியுள்ளார். எனினும், அவர் தங்களுடைய வாடிக்கையாளர் இல்லை என அந்த உணவகம் பதிலளித்தது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!