இந்தியா செய்தி

ரயில் பயணத்தின் போது மொடல் அழகியிடம் சில்மிஷம்

ரயில் பயணத்தின் போது தமிழகத்தைச் சேர்ந்த மொடல் அழகி ஒருவரிடம் சில்மிஷம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மொடல் அழகி ஒருவர் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு ரயிலில் சென்றுள்ளார். அப்போது ரயிலில் பயணம் செய்த இளையுர் மொடல் அழகியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் பயத்துடனேயே பயணம் செய்த அந்த பெண், திருவனந்தபுரத்திற்கு சென்று இறங்கியதும் ரயில்வே பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முறைப்பாட்டிக் அடிப்படையில் ரயில்வே பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இவ்வழக்கு கோட்டயம் ரயில்வே பொலிசுக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் கொல்லத்தைச் சேர்ந்த அன்சர் கான் (வயது 25) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.

(Visited 35 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி