இலங்கை

இலங்கையில் மிளகாய் பயிரிட்டு கோடீஸ்வரனான விவசாயி

அநுராதபுரம் புளியங்குளம் பிரதேசத்தில் விவசாயி ஒருவர் அரை ஏக்கரில் ஒரு கோடி ரூபா வருமானம் பெற்று மிளகாய் சாதனையை புதுப்பித்துள்ளார்.

அதற்கமைய, குறைந்த பயிரிடப்பட்ட நிலத்தில் அதிக வருமானம் ஈட்டிய மிளகாய் விவசாயி என்ற சாதனையில் அவர் இணைந்துள்ளார்.

விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையின் கீழ் அவருக்கு இந்த வருமானம் கிடைத்துள்ளது.

புளியங்குளத்தை சேர்ந்த பந்துல என்பவர் 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளார்.

சந்தையில் தற்போதைய மிளகாய் விலைக்கமைய, குறைந்தபட்சம் 13 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டக்கூடியதாகவும், ஜனவரி மாதம் 14ஆம் திகதி வரையில் அவர் தனது மிளகாயை அறுவடை செய்ய முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், மிளகாய்ச் செய்கையின் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புளியங்குளம் பகுதியில் அரை ஏக்கரில் மிளகாய்ச் செய்கையை பந்துல ஆரம்பித்துள்ளார்.

இதற்கு முன்னர், மிளகாய்ச் செய்கையில் அதிக வருமானம் பெற்ற இரு விவசாயிகளும் திரப்பனை மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து பதிவாகியிருந்ததாகவும், அவர்கள் 50 லட்சத்து 60 லட்சம் ரூபாவை சம்பாதித்ததாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!