அமெரிக்காவில் நடுவானில் பறந்த விமானத்தில் ஏற்பட்ட விபரீதம் – திடீரென விழுந்த சக்கரம்
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து புறப்பட்ட United Airlines விமானத்திலிருந்து சக்கரம் விழுந்தமையினால் பதற்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் விமானம் செல்லவேண்டிய இடமான டென்வரில் (Denver) பாதுகாப்பாக தரையிறங்கியதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அந்த போயிங் ரக 757-200 விமானத்தில் 174 பயணிகள் இருந்தனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. சக்கரத்தை லாஸ் ஏஞ்சலிஸில் கண்டுபிடித்துவிட்டதாக United Airlines குறிப்பிட்டுள்ளது.
சக்கரம் ஏன் விழுந்தது என்பதை விசாரிப்பதாக நிறுவனம் கூறியது. அண்மை மாதங்களில் போயிங் விமானத்திருந்து சக்கரம் இரண்டு முறை விழுந்துவிட்டது.
இதற்கு முன்னர் மார்ச் மாதம் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து (San Francisco) புறப்பட்ட விமானத்திலிருந்து சக்கரம் விழுந்தது.
ஜப்பானுக்குப் புறப்பட்ட அந்த விமானம் அவசரமாகத் தரையிறங்கவேண்டியிருந்தது.