இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தேசியப்பட்டியல் ஊடாக மன்றுக்கு செல்லும் உறுப்பினர்!
இலங்கையில் நடைபெற்று முடிந்து பாராளுமன்ற தேர்தலில் தேசிய பட்டியல் மூலம் மன்றுக்கு தெரிவானவர்களின் பெயர் பட்டியல்களை கட்சிகள் அறிவித்துள்ளன.
இதன்படி இலங்கை தமிழரசு கட்சி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம் தேசியல் பட்டியல் உறுப்பினராக மன்றுக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வன்னி மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





