தமிழரசுக் கட்சிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கை தமிழ் அரசு கச்சி எம்.பி.க்கள் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் இந்த சந்திப்பு இடம்பெற்றமையும் விசேட அம்சமாகும்.
குறித்த தேர்தலுக்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள போதிலும், இது வரையில் இலங்கை தமிழ் அரசு கட்சி தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசியல் கட்சிகள் பொது வேட்பாளரை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.