பஞ்சாபில் முதுகலை மாணவர் ஒருவர் நண்பரால் சுட்டுக் கொலை
பஞ்சாப்(Punjab) மாநிலம் லூதியானாவில்(Ludhiana) 25 வயது வணிக நிர்வாக முதுகலை(MBA) மாணவர் ஒருவர் தனது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் பல்கலைக்கழக பிராந்திய மையத்தின்(PURC) மாணவர் ராஜ்வீர் சிங் கைரா(Rajveer Singh Khaira) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி விஜய் குமார்(Vijay Kumar) குறிப்பிட்டுள்ளார்.
சம்பவ தினத்தன்று தல்வாராவில்(Talwara) உள்ள துப்பாக்கிச் சூடு(shooting range) தளத்திற்கு ராஜ்வீர் சிங் கைரா மற்றும் அவரது 27 வயது நண்பர் ஜுகாத் சிங்(Jugat Singh) ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது ஜுகாத் சிங் தனது உரிமம் பெற்ற ஆயுதத்தால் கைராவைச் சுட்டுக் கொன்றதாகக் அறியப்படுகிறது.
இந்நிலையில், கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் குற்றவாளி ஜுகாத் சிங் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.




