இலங்கையில் மரக்கறிகளின் விலையில் பாரிய மாற்றம்!
இலங்கையில் மரக்கறிகளின் விலை 05 நாட்களில் 40% குறைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அனுர சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்ய மறுத்து மாற்று வழிகளில் ஈடுபடுவதனால் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களாக சந்தையில் 2,500 ரூபாவாக உயர்ந்திருந்த ஒரு கிலோ கேரட்டின் சில்லறை விலை இன்று 900 ரூபாவாக குறைந்துள்ளது.
மேலும், முட்டைகோஸ், வெண்டைக்காய், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலையும் கடந்த சில தினங்களை விட குறைந்துள்ளது.





