இலங்கை

இலங்கையில் மயானம் ஒன்றிலிருந்து இருந்து ஆணொருவரின் சடலமொன்று கண்டுபிடிப்பு!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயானம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தேற்றாத்தீவு மயானத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள குறித்த அடையாளம் காணப்படாத சடலத்திற்கு அருகாமையில் சமய வழிபாடுகள் இடம் பெற்றதற்கான தடையங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் நரபலி பூஜைகள் எதுவும் நடாத்தப்பட்டதா என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் குறித்த பகுதிக்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் குற்றத்தடவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சடலம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதனால் அடையாளம் காண்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரியவருகின்றது.

குறித்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content