ஜெர்மனியில் சிறுமியை திருமணம் செய்து 6500 யூரோக்களை வழங்கிய நபர்
ஜெர்மனி நாட்டின் ஆப்கானிஸ்திய அகதி ஒருவர் 13 வயதுடைய சிறுமியை திருமணம் செய்து கொள்வதற்காக குறித்த சிறுமியின் தந்தைக்கு பணம் வழங்கியமை நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது.
ஜெர்மனிய நாட்டில் சிறுவர் சிறுமிகளுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து வருகின்றது.
26 வயதுடைய ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த அகதி ஒருவர் 13 வயதுடைய சிறுமியை திருமணம் செய்து கொள்வதற்காக அந்த சிறுமியுடைய தந்தைக்கு 6500 யுரோக்களை வழங்கியதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த சிறுமியானவர் 26 வயதுடைய ஆப்கானிஸ்தான் நாட்டவரை திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் காரணத்தினால் இவர் இந்த சிறுமி மீது வன்முறையை முயற்சித்ததாக தெரியவந்து இருக்கின்றது.
இந்நிலையில் இவர் பிரங்வோர்ட் நகர நீதிமன்றதில் இந்த சிறுமியுடைய தந்தையானவர் தான் வழங்கிய 6500 யூரோக்களையும் அந்த சிறுமியுடைய தந்தையார் தனக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதேவேளையில் இந்தவழக்கை விசாரித்த நீதிமன்றமானது இது சட்டவிரோதமான செயற்பாடு என்றும் இந்த சட்ட விரோதமான செயலை நீதிமன்றம் அங்கிகரிக்க மாட்டாது என்று தமது தீர்ப்பில் தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.
அத்துடன்26 வயதுடைய இளைஞரையும், குறித்த சிறுமியின் தந்தைக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.