கொழும்பு புறநகரில் ஒருவர் கொடூரமாக கொலை
மொரட்டுவ, லக்ஷபதி, ரதுகுருசா வத்தையில் உள்ள வீடொன்றில் இன்று (15) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
41 வயதான ஹரேந்திர குமார் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸ் நிலையப் பொலிசார் சந்தேக நபரை கைது செய்திருந்தனர்.
கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை, மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





