இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி – கொழும்பில் ஒருவர் கைது
இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நாடளாவிய ரீதியில் பலரிடம் இலட்சக்கணக்கான ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அஜித் சிசிர குமார என்ற நபர் கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிரிபத்கொட பிரதேசத்தில் இவரின் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் புலனாய்வாளர்கள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மோசடி செய்யப்பட்ட பணத்துடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
(Visited 3 times, 1 visits today)