முச்சக்கரவண்டியை அடகு வைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நபர்
சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டியை 1 இலட்சத்து இருபதாயிரம் ரூபாவை அடமானமாக வைத்துவிட்டு தலையில் துணியை சுற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபர் மீட்கப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை, மலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் அண்மையில் (12) பாணந்துறை புகையிரத நிலையத்தில் இருந்து இறங்கி வரும் பயணிகளை சோதனையிட்ட போது, சோதனையின் போது பை மற்றும் துணியுடன் புகையிரதத்தில் நடந்து செல்வதை பொலிஸார் கண்டனர்.
தனது 10 லட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டியை ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாவிற்கு அடகு வைத்துவிட்டு விரக்தியில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கையில் இருந்த துணி குறித்த விசாரணையில், ரயில் வந்ததும், பயம் காரணமாக முகத்தை போர்த்தி ரயிலில் குதிக்க கொண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் அந்த நபரை உளவியல் ஆலோசனைக்கு பரிந்துரைத்ததாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.