ஐரோப்பா

ஜேர்மனில் காடு ஒன்றில் கட்டிவைக்கப்பட்டிருந்த நபர்; பெண் ஒருவரைத் தேடி வரும் பொலிஸார்

ஜேர்மனியிலுள்ள காடு ஒன்றில், கட்டிவைக்கப்பட்ட நிலையில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார். விசாரணையில் விபரீத உண்மை ஒன்று தெரியவந்தது.

ஜேர்மனியிலுள்ள Bueckburg நகரிலுள்ள காட்டுப்பகுதி வழியே சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரும், வேட்டைக்காரர் ஒருவரும், காட்டுக்குள்ளிருந்து ஒரு ஆண் சத்தமிடுவதைக் கேட்டு பொலிஸாருக்கு தகவலளித்துள்ளனர்.

உடனடியாக பொலிஸார் அங்கு விரைய, வேட்டையாட வேட்டைக்காரர்கள் பயன்படுத்தும் ஒரு மேடையில், ஆண் ஒருவர், பெண்கள் அணியும் ஸ்டாக்கிங்ஸ் மற்றும் கயிற்றால் கட்டிவைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுள்ளனர்.

என்ன நடந்தது என அவரிடம் பொலிஸார் விசாரிக்கும்போது, தானும் ஒரு பெண்ணும் நெருக்கமாக இருப்பதற்காக அந்த இடத்துக்கு வந்ததாகவும், வித்தியாசமான விளையாட்டு ஒன்றை விளையாடலாம் என அந்தப் பெண் தன்னை தனது ஸ்டாக்கிங்ஸ் மற்றும் கயிற்றால் கட்டிப்போட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், திடீரென அந்தப் பெண்ணுக்கு ஒரு மொபைல் அழைப்பு வந்துள்ளது. உடனே அந்தப் பெண் அந்த நபரை அப்படியே விட்டு விட்டு ஓடிவிட்டாராம்.

பொலிஸார் அவரை மீட்ட நிலையில், அவர் அந்தப் பெண்ணைக் குறித்த எந்த விவரத்தையும் வெளியிட மறுத்துவிட்டார். ஆனாலும், அந்தப் பெண் அந்த ஆணைக் கட்டிப்போட்டுவிட்டு சென்றது குற்றச்செயலாக கருதப்படலாம் என்பதால், அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுவருகிறார்கள்.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்