ஆப்பிள் போன் விற்பனையில் பெரும் சரிவு
அமெரிக்காவின் பிரபல ஆப்பிள் நிறுவனம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மிகப்பெரிய விற்பனை சரிவை பதிவு செய்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் இதன் விற்பனை 4 வீதத்தால், அதாவது 91 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபோன் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது, இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை சரிவை பாதித்துள்ளது.
உலகளாவிய ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்து வரும் பின்னணியில் இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் ஐபோன் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளமை விசேட அம்சமாகும்.
இருப்பினும், புதிய தயாரிப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் விற்பனை அதிகரிக்கும் என்று ஆப்பிள் எதிர்பார்க்கிறது.
மைக்ரோசாப்ட், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் மற்றும் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பயன்பாடுகளில் AI தொழில்நுட்பத்தை சேர்ப்பது குறித்து தொடர்ந்து விவாதித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் AI தொழில்நுட்பத்திற்கான தனது திட்டங்களைப் பற்றி அதிகம் வெளியிடவில்லை.
ஐபோனில் AI அம்சங்களைச் சேர்ப்பது, Huawei மற்றும் Samsung போன்ற போட்டியாளர்களுடன் போட்டியிடுவதில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு நன்மையைக் கொடுக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Galaxy S24 ஸ்மார்ட்போன்களில் AI அம்சங்களுக்கான வலுவான தேவை காரணமாக, Samsung தற்போது ஸ்மார்ட்போன் விற்பனையில் உலகளவில் முன்னணியில் உள்ளது.