பெருவில் 4.7 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்…

தென் அமெரிக்க நாடான பெருவில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பெருவின் அந்தமார்காவில் 63 கிமீ தொலைவில் செவ்வாயன்று 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமனது உள்ளூர் நேரப்படி 1.42க்கு உணரப்பட்டது.
இதன் ஆழம் 35 கிமீ ஆகவும் பதிவாக்கியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தின் மையம் முறையே அட்சரேகை 11.909 தெற்கிலும் மற்றும் தீர்க்கரேகை 74.245 ஆகவும் இருந்தது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் ‘நெருப்பு வளையம்’ ஏன்றழைக்கப்படும் அபாயப் பகுதியில் பெரு அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுக்கின.
(Visited 18 times, 1 visits today)