சோம்பேறிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம் – ஜப்பானின் புதிய முயற்சி

குறுகிய காலத்தில் உடலை மிக நன்றாக சுத்தம் செய்யும் புதிய இயந்திரத்தை ஜப்பான் உருவாக்கியுள்ளது.
இதற்கு Human Washing Machine என பெயரிடப்பட்டுள்ளதுடன், துணிகளை சலவை இயந்திரத்தில் துவைத்து உலர்த்துவது போன்று மனித உடலையும் சுத்தம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபர் மிகவும் சோர்வாக இருந்தால் அல்லது விரைவாக குளிக்க வேண்டியிருந்தால், இயந்திரம் 15 நிமிடங்களுக்குள் அவர்களைக் கழுவும் திறன் கொண்டது.
இந்த இயந்திரத்தின் உள்ளே ஒருவர் உட்கார வேண்டும் என்றும், சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் எந்த சிரமமும் இன்றி மிக எளிதாக சுத்தம் செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனித வாஷிங் மெஷின் AI தொழில்நுட்பத்தின் படி வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது நபரின் உடல் மற்றும் தோலின் நிறத்தின் அடிப்படையில் சலவை மற்றும் உலர்த்துதல் செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது.
ஜப்பானிய நிறுவனமான ‘சயின்ஸ் கோ’வைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு இந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளது.
ஒசாகா கன்சாய் எக்ஸ்போவில் இந்த இயந்திரம் 1,000 பேரால் சோதிக்கப்படும்.