நெதர்லாந்தில் வீடற்ற நபர் ஒருவருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

நெதர்லாந்து – ஆம்ஸ்டர்டாம் ரயில் நிலையத்தில் 2000 யூரோக்கள் கொண்ட பயணப்பை ஒன்றை கட்டுப்பிடித்து கொடுத்த வீடற்ற ஒருவருக்கு பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.
18 மாதங்களாக வீடற்ற நிலையில் இருந்த ஹாட்ஜர் அல்-அலி, ஆம்ஸ்டர்டாம் மத்திய நிலையத்தில் பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிக்கும் பணியில் இருந்தபோது அவருக்கு இந்த பயணப் பை கிடைத்துள்ளது.
குறித்த பையுடன் சம்பந்தப்பட்ட நபரை அணுகுவதற்கான ஆவணங்கள் இன்றிய நிலையில், அவர் அந்த பையை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் அவரின் நேர்மையை பாராட்டி காவல்துறையினர் 50 யூரோ மதிப்புள்ள பரிசு வவுச்சரை வழங்கியுள்ளனர்.
ஒரு வருடத்திற்குள் பணம் க்ளைம் செய்யப்படவில்லை என்றால், அது கண்டுபிடிக்கப்பட்டவருக்குச் செல்லுப்படியாகும் எனக் கூறப்படுகிறது.
(Visited 15 times, 1 visits today)