வட்டவளையில் 30 அடி குன்றில் இருந்து விழுந்து விபத்திற்குள்ளான லொறி!

எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்ய பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வட்டவளை பகுதியில் உள்ள குன்றின் மீது விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் இன்று (07) காலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் போது லொறியில் மூன்று பேர் பயணித்துள்ளதுடன், லொறியின் உதவியாளர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் லொறி பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)